இந்தியா

புணேவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 515 பேருக்கு கரோனா: மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,750

DIN

புணேவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 515 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 5ஆம் கட்ட பொது முடக்கம் அமலில் உள்ளது. எனினும் நாட்டில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில தினங்களாக தொடர்ந்து 10 ஆயிரத்தைத் தாண்டி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரம், தமிழ்நாடு, தில்லி ஆகிய மாநிலங்களில் கரோனா பாதிப்பு மிகக்கடுமையாக உள்ளது. 

இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலம், புணே மாவட்டத்தில கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 515 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இத்துடன் அங்கு ஒட்டு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,750ஆக உயர்ந்துள்ளது.

மேலும் அங்கு கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவுக்கு 12 பலியான நிலையில் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 552ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

SCROLL FOR NEXT