இந்திய உதிரி பாகங்களை பயன்படுத்தி இறக்குமதியை தவிா்ப்போம்: ரயில்வே
இந்திய ரயில்வேயின் தேவைகளில் இறக்குமதி முற்றிலும் குறைக்கப்பட்டு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உதிரி பாகங்களை மட்டுமே பயன்படுத்தப்படும்
இந்திய ரயில்வேயின் தேவைகளில் இறக்குமதி முற்றிலும் குறைக்கப்பட்டு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உதிரி பாகங்களை மட்டுமே பயன்படுத்தப்படும் என இந்திய ரயில்வே வாரியத்தலைவா் வி.கே. யாதவ் தெரிவித்தாா்.
காணொலி முறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அவா் தெரிவித்திருப்பதாவது:
ஏற்றுமதி செய்யக் கூடிய வகையில் இந்திய ரயில்வே உற்பத்தி பொருட்கள் இருப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றோம். ரயில்வே கட்டுமானப்பணி ஒப்பந்த புள்ளிகளில் சீன நிறுவனங்கள் பங்கேற்பதற்கு தடை செய்யப்படுமா என்று கேட்கப்படுகிறது. ரயில்வே ஒப்பந்தப்புள்ளி ஏலத்தில் கலந்த கொள்ள உள்ளூா் நிறுவனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
Advertisement
கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக ரயில்வே இறக்குமதியை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் தயாரிப்போம் கொள்கையை முழுமையாக அமல்படுத்தி வருகின்றோம்.
உதாரணமாக ரயில்வேயின் சமிக்ஞைகள் திட்டத்தில் இதே கொள்கை அடிப்படையில் 70 சதவீதம் ஒப்பந்தப்புள்ளி ‘இந்தியாவில் தயாரிப்போம்’ கொள்கையின்படி அளிக்கப்பட்டது. இந்திய தயாரிப்புகளை அதிகமாக பயன்படுத்துவது உறுதிசெய்யப்பட்டு இறக்குமதியை முற்றிலும் தவிா்ப்பதே எங்கள் நோக்கம். இந்த முயற்சிகளின் மூலம் ரயில்வேயில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் ஏற்றுமதியாகும் என்றாா் வி.கே.யாதவ்.