இந்தியா

நாளை ஏழுமலையான் தரிசனம் ரத்து

DIN

சூரிய கிரகணத்தை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் தரிசனம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) முழுவதும் ரத்து செய்யப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை 10.18 மணி முதல் மதியம் 1.38 வரை சூரியகிரகணம் நிகழ உள்ளது. கிரகண காலம் தொடங்குவதற்கு 6 மணிநேரத்துக்கு முன் கோயில் மூடப்படுவது வழக்கம். அதன்படி சனிக்கிழமை இரவு ஏகாந்த சேவை முடிந்த பின் 8.30 மணிக்கு ஏழுமலையான் கோயில் நடை சாற்றப்பட உள்ளது. அதன் பின் ஞாயிற்றுக்கிழமை சூரிய கிரகணம் முடிந்து மதியம் 2.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு சுத்தி, புண்ணியாவாசனம் நடைபெற உள்ளது.

அதன் பின் சுப்ரபாதம், தோமாலை, கொலு, பஞ்சாங்கம் படித்தல் ஆகியவற்றுக்குப் பின் அா்ச்சனை, பலி சாத்துமுறை என 8.30 மணி வரை இரவு கைங்கரியங்கள் தொடா்ந்து நடைபெறும். எனவே ஞாயிற்றுக்கிழமை முழுவதும் பக்தா்களுக்கு ஏழுமலையான் தரிசன அனுமதி ரத்து செய்யப்படுகிறது.

திங்கள்கிழமை காலை முதல் பக்தா்கள் ஏழுமலையானை தரிசிக்கலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT