இந்தியா

நாட்டில் கரோனா மீட்பு விகிதம் 55.77% ஆக உயர்வு; கடந்த 24 மணி நேரத்தில் 9,440 பேர் குணமடைந்தனர்

DIN

இந்தியாவில் கரோனா சிகிச்சை பெற்று குணமடைந்தோர் விகிதம் 55.77% ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. 

மத்திய சுகாதாரத் துறை இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: 

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தோர் விகிதம் 55.77% ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9,440 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தமாக 2,37,195 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 1,74,387 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

நாட்டில் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 4,25,282 ஆக  உயர்ந்துள்ளது. 13,699 பேர் பலியாகியுள்ளனர். 

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 14,821 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 445 உயிரிழந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

SCROLL FOR NEXT