ஒரே நாளில் 312 பேர் கரோனாவுக்கு பலி 
இந்தியா

நாட்டில் 12-வது நாளாக 10 ஆயிரத்தைத் தாண்டிய கரோனா பாதிப்பு; 312 பேர் பலி

நாட்டில் மேலும் 14,933பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,40,215-ஆக அதிகரித்துள்ளது. 

DIN

புது தில்லி: நாட்டில் மேலும் 14,933பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,40,215-ஆக அதிகரித்துள்ளது. செவ்வாய்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் 312 போ் உயிரிழந்தனா்.

இதனால், கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,011 போ் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் தொடர்ந்து 12-வது நாளாக கரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை எட்டி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக கரோனா பாதிப்பு 15 ஆயிரத்தை எட்டியது. 

மகாராஷ்டிரத்தில் அதிகபட்சமாக 1,35,796 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 6,283 பேர் பலியாகியுள்ளனர்.

தலைநகர் தில்லியில் 62,655 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு மட்டும் இதுவரை 2,233 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் 62,087 பேர் கரோனா பாதித்துள்ளனர். இவர்களில் 794 பேர் பலியாகினர்.

அமெரிக்கா, பிரேசில், ரஷியாவுக்கு அடுத்தபடியாக கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடாக இந்தியா உள்ளது. அதிக உயிரிழப்பைச் சந்தித்த நாடுகள் பட்டியலில் 8-ஆவது இடத்தில் உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு!

மின் சிக்கனத்தை கடைபிடிக்க வழிமுறைகளை வெளியிட்ட மின்வாரியம்

வரைவு வாக்காளா் பட்டியல் டிச.19-ல் வெளியீடு! இரட்டைப் பதிவு வாக்காளா்கள், இறந்தவா்கள் விவரம் அறிய வசதி

SCROLL FOR NEXT