புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை தொடங்கியது 
இந்தியா

வரலாற்றுப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை தொடங்கியது

பக்தர்கள் இன்றி, கடும் பாதுகாப்புக்கு இடையே வரலாற்றுப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை தொடங்கியது.

PTI


புரி: பக்தர்கள் இன்றி, கடும் பாதுகாப்புக்கு இடையே வரலாற்றுப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை தொடங்கியது.

ஒடிசா மாநிலம் புரி ஜெகந்நாதர் ரத யாத்திரைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து, புரி மாவட்டத்தில் நேற்று இரவு 9 மணி முதல் புதன்கிழமை மதியம்2 மணி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

வழக்கமாகக் காணப்படும் பக்தர்களின் கூட்டம் இன்றி புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை தொடங்கியுள்ளது. ஆயிரக்கணக்கான காவல்துறையினரின் பாதுகாப்புடன், தேரோட்டம் நடைபெறும் பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

புரி மாவட்டத்துக்கு வரும் அனைத்து எல்லைப் பகுதிகளும் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. புரி ரத யாத்திரையில் பங்கேற்று தேரை இழுக்கும் கோயில் சேவார்த்திகள் மற்றும் காவல்துறையினர் அனைவரும் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விடுபட்டவர்களுக்கு டிசம்பர் முதல் மகளிர் உரிமைத்தொகை: துணை முதல்வர் உதயநிதி

தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும்!

ஆப்கன் நிலநடுக்கம்: 20க்கும் மேற்பட்டோர் பலி, 320 பேர் காயம்

கடல் கடந்து வந்து காதலரை கரம் பிடித்த ஜெர்மன் பெண்! தமிழ் முறைப்படி திருமணம்!!

கரூர் வழக்கு: கரூர் நீதிமன்ற நீதிபதியுடன் சிபிஐ அதிகாரிகள் சந்திப்பு!

SCROLL FOR NEXT