முகப்பு
இந்தியா

பஞ்சாபில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உள்பட 5 பேர் கொலை

பஞ்சாப் மாநிலம் கைரோன் கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மற்றும் வீட்டு பணிப்பெண் உள்பட ஐந்து பேர் அடையாளம் தெரியாத நபரால் கொலை செய்யப்பட்டனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:50 PM
பஞ்சாபில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உள்பட 5 பேர் கொலை
பகிர்:


தர்ன் தரன்: பஞ்சாப் மாநிலம் கைரோன் கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மற்றும் வீட்டு பணிப்பெண் உள்பட ஐந்து பேர் அடையாளம் தெரியாத நபரால் கொலை செய்யப்பட்டனர்.

பிரிஜ் லால் (55) அவரது ஒரு மகன், இரண்டு மருமகள்கள், வீட்டுப் பணிப்பெண் என ஐந்து பேரும் வீட்டில் சடலமாகக்கிடந்தனர்.

மிகக் கூர்மையான ஆயுதத்தால், அவர்களது கழுத்து அறுக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.