முகப்பு
இந்தியா

ஆக. 14-ல் சசிகலா விடுதலை?

வரும் ஆகஸ்ட் மாதம் பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா விடுதலையாகிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:50 PM
சசிகலா
பகிர்:

வரும் ஆகஸ்ட் மாதம் பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா விடுதலையாகிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் 2017 பிப். மாதம் முதல் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தண்டனை காலம் வருகிற 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைகிறது.

ஆனால் அவர்கள் அதற்கு முன்பாகவே விடுதலை ஆக வாய்ப்பு உள்ளதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில்தான் வரும் ஆகஸ்ட் மாதம் பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா விடுதலையாகிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பாஜகவின் ஆசிர்வாதம் ஆச்சாரி தனது டிவிட்டரில், ஆக. 14-ம் தேதி சசிகலா விடுதலையாகலாம் எனத் தகவல் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →