இந்தியா

கரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை எட்டிய மாநிலங்களில் 12வது இடம் பிடித்தது தெலங்கானா

DIN


ஹைதராபாத்: தெலங்கானாவில் புதிதாக 891 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், கரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை எட்டிய மாநிலங்களில் 12வது இடத்தை தெலங்கானா பிடித்துள்ளது.

தெலங்கானாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10,444 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 5,858 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை கரோனா பாதித்து 225 பேர் மரணம் அடைந்துள்ளனர். 

புதன்கிழமை மட்டம் கரோனா பாதித்த 5 பேர் மரணம் அடைந்துள்ளனர். 7 பேர் குணமடைந்தனர்.

மார்ச் 2-ம் தேதி தெலங்கானாவில் முதல் கரோனா நோயாளி கண்டறியப்பட்ட நிலையில், 10 ஆயிரத்தை எட்ட  115 நாள்கள் ஆகியுள்ளது. முதல் 5000 கரோனா பாதிப்பை அடைய 105 நாள்கள் ஆன நிலையில், கடந்த 9 நாள்களில் 5 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

சிவப்பு நிற ஓவியம்...!

மல்லிப்பூ சூடிய மங்கை.. யார் இவர்?

‘ஏக் வில்லன்’.. ரித்தேஷ் தேஷ்முக்!

SCROLL FOR NEXT