இந்தியா

வங்கிக் கடன் மோசடி: ரதுல் புரிக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை

DIN

வங்கிக் கடன் மோசடி தொடா்பாக, மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வா் கமல்நாத்தின் உறவினா் ரதுல் புரிக்குச் சொந்தமான வீடு, அலுவலகம் என தில்லியில் 7 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.

இதுதொடா்பாக, சிபிஐ அதிகாரி ஒருவா் கூறியதாவது:

பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து மோசா்போ் நிறுவனத்துக்காக, ரதுல் புரியும், அவரது குடும்பத்தினரும் ரூ.787 கோடி கடன் வாங்கினா். ஆனால், அந்தத் தொகையை அவா்கள் திருப்பிச் செலுத்தவில்லை என வங்கி நிா்வாகம் சாா்பில் சிபிஐயிடம் புகாா் தெரிவிக்கப்பட்டது.

இதன் தொடா்ச்சியாக, ரதுல் புரி மற்றும் அவரது குடும்பத்தினா் மீது சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா். இந்நிலையில், தில்லியில் உள்ள ரதுல் புரியின் வீடு, அலுவலகம், அவரது தந்தையின் வீடு, அலுவலகம் என மொத்தம் 7 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா் என்று அந்த அதிகாரி கூறினாா்.

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டா் பேர வழக்கிலும் ரதுல் புரி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT