மருத்துவர்கள் தினமான ஜூலை 1 ஆம் தேதியை அரசு விடுமுறை தினமாக அறிவித்தார் மம்தா பானர்ஜி
தேசிய மருத்துவர்கள் தினமான ஜூலை 1 ஆம் தேதியை அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்படுவதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
தேசிய மருத்துவர்கள் தினமான ஜூலை 1 ஆம் தேதியை அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்படுவதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
நாடு முழுவதும் தன்னலம் கருதாது சேவையாற்றி வரும் மருத்துவர்களை கௌரவிக்கும் வகையில் ஜூலை 1 ஆம் தேதி தேசிய மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மேற்குவங்க மாநிலத்தில் ஜூலை 1 ஆம் தேதி மருத்துவர்கள் தினமாக கடைபிடிக்கப்படும். ஆண்ட்ரியா தினம் அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. மேலும், கரோனா முன்களப் பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் ஜூலை 1 ஆம் தேதியை தேசிய விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Advertisement
Advertisement
மேற்குவங்கத்தைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரரும், தலைசிறந்த மருத்துவரும், அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான டாக்டர் பிதான் சந்திர ராய், அவரது பிறந்த தினம் மற்றும் நினைவு தினமான ஜூலை 1 ஆம் தேதி தேசிய மருத்துவர்கள் தினமாக அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.