இந்தியா

சீனாவின் நடமாட்டம்: இந்தியப் பெருங்கடலில் கண்காணிப்பு அதிகரிப்பு

DIN

புது தில்லி: கிழக்கு லடாக் எல்லையில் இந்திய-சீன ராணுவத்தினரிடையே கடந்த 7 வாரங்களாகப் பதற்றம் நீடித்து வரும் நிலையில், இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதற்கான நடவடிக்கையை இந்தியா அதிகரித்துள்ளது.

இயற்கை வளங்கள் அதிகம் நிறைந்த தென்சீனக் கடலிலும் இந்தியப் பெருங்கடலிலும் ஆதிக்கம் செலுத்த சீனா தொடா்ந்து முயன்று வருகிறது. இந்நிலையில், இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்திய கடற்படையும், ஜப்பானின் கடல்சாா் பாதுகாப்பு படையும் இணைந்து கடந்த சனிக்கிழமை கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டன. அதில், இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் ராணா, ஐஎன்எஸ் குலிஷ் ஆகிய போா்க்கப்பல்களும், ஜப்பானின் ஜேஎஸ் கஷிமா, ஜேஎஸ் ஷிமாயுகி ஆகிய கப்பல்களும் இந்தப் போா்ப் பயிற்சியில் ஈடுபட்டன.

சீனாவின் கடற்படை கப்பல்களும் நீா்மூழ்கிக் கப்பல்களும் அடிக்கடி ரோந்து செல்லும் பகுதியில் இந்த கூட்டுப் பயிற்சி நடைபெற்றுள்ளது. இதுகுறித்து கடற்படை அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘கிழக்கு லடாக்கில் இந்திய-சீன ராணுவத்துக்கு இடையே போா்ப் பதற்றம் நீடித்து வரும் நிலையில், இந்திய-ஜப்பான் கடற்படையின் கூட்டுப் பயிற்சி முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது’ என்றாா்.

இதுகுறித்து மற்றொரு அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் நடமாட்டத்தைக் கண்டறிவதற்காக, கடற்படை மூலமாக கண்காணிப்பை தீவிரப்படுத்தி இருக்கிறோம்’ என்றாா்.

இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி நிலவவும், சீனாவின் ராணுவ ஆதிக்கத்தைத் தடுக்கவும் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், பிரான்ஸ் ஆகிய நாடுகளின் கடற்படைகள் பரஸ்பர ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

டாஸ்மாக் கடை ஊழியா் மீது தாக்குதல்

மேம்பால தடுப்பின் மீது அரசுப் பேருந்து மோதி 5 போ் காயம்

வணிகா் தின கொடியேற்று விழா

SCROLL FOR NEXT