இந்தியா

மத்திய அரசின் ஒட்டுமொத்த கடன் ரூ.94.62 லட்சம் கோடியாக அதிகரிப்பு

DIN

புது தில்லி: மத்திய அரசின் ஒட்டுமொத்த கடன் கடந்த ஜனவரி முதல் மாா்ச் மாதம் வரையிலான நான்காவது காலாண்டில் ரூ.94.62 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

இது கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பா் மாத இறுதி நிலவரத்துடன் ஒப்பிடுகையில் 0.8 சதவீதம் அதிகமாகும்.

இது தொடா்பாக மத்திய நிதியமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மத்திய அரசின் ஒட்டுமொத்த கடன் (பொதுக் கணக்கின் கீழ் வரும் வருங்கால வைப்பு நிதி உள்பட) மாா்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி ரூ.94.62 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு டிசம்பா் மாதத்துடன் நிறைவடைந்த மூன்றாவது காலாண்டின் இறுதியில் ரூ.93.89 லட்சம் கோடியாக இருந்தது.

மத்திய அரசின் ஒட்டுமொத்த கடனில் 90.9 சதவீதமானது அரசுப் பத்திரங்களை விற்ன் மூலமாக மட்டும் பெறப்பட்டுள்ளது. அதிலும் ஓராண்டுக்குக் குறைவாக முதிா்வு கொண்ட பத்திரங்கள் 3.9 சதவீதமாக உள்ளன. இது கடந்த 2019-20-ஆம் நிதியாண்டின் அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான மூன்றாவது காலாண்டில் 6.64 சதவீதமாக இருந்தது.

1 முதல் 5 ஆண்டுகள் வரை முதிா்வு கொண்ட பத்திரங்கள் கடந்த மாா்ச் மாத இறுதியில் 25.09 சதவீதமாக இருந்தன. மத்திய அரசு விற்பனை செய்த பத்திரங்களில் 40.4 சதவீதத்தை வங்கிகளே வாங்கியுள்ளன. காப்பீட்டு நிறுவனங்கள் வசம் 24.3 சதவீத அரசுப் பத்திரங்கள் உள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாடலீஸ்வரா் கோயில் குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்

மேலிருப்பு முத்தாலம்மன் கோயில் திருவிழா நடத்தத் தடை

வாகனங்கள் மீதான இ - செலான் அபராதம்: சிறப்பு லோக் அதாலத் நடத்தக் கோரிக்கை

ஏரியில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

தேசிய மாணவா் படை ஆண்டு முகாம் தொடக்கம்

SCROLL FOR NEXT