இந்தியா

நிர்பயா குற்றவாளிகளுக்கு நாளை தூக்கு இல்லை

DIN


புது தில்லி: நிர்பயா குற்றவாளிகள் நால்வருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதை நிறுத்தி வைத்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு நால்வருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த வாரண்டை நிறுத்தி வைத்தும், அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை மரண தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாகவும் தில்லி நீதிமன்றம் கூறியுள்ளது.

நிர்பயா குற்றவாளிகள் நால்வருக்கும் நாளை காலை மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில், தொடர்ந்து 3வது முறையாக தேதி குறிப்பிடப்பட்டு மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தா சார்பில் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அது நிலுவையில் இருப்பதால் 3ம் தேதி நால்வரையும் தூக்கிலிட தடை விதிக்குமாறு பவன் குப்தா சார்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தில்லி நீதிமன்றம், குற்றவாளிகள் நால்வரையும் தூக்கிலிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

திருவிழாவில் கோஷ்டி மோதல்: 10 பேருக்கு கத்திக்குத்து

ராமநாதபுரம் மாவட்ட சிறைகளில் நீதிபதி, ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT