முகப்பு
இந்தியா

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹோலி கொண்டாட்டத்தை ரத்து செய்தார் பிரதமர் மோடி

கரோனா வைரஸ் தொற்று பரவுவதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஹோலி கொண்டாட்டத்தில் பங்கேற்கவில்லை என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இந்தியா

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹோலி கொண்டாட்டத்தை ரத்து செய்தார் பிரதமர் மோடி

கரோனா வைரஸ் தொற்று பரவுவதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஹோலி கொண்டாட்டத்தில் பங்கேற்கவில்லை என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:04 PM
பகிர்:


புது தில்லி: கரோனா வைரஸ் தொற்று பரவுவதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஹோலி கொண்டாட்டத்தில் பங்கேற்கவில்லை என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், பொதுமக்கள் ஒரே இடத்தில்  அதிகளவில் கூடுவதைத் தவிர்க்குமாறு சுகாதாரத் துறை நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

கரோனா வைரஸ் தொற்று உலக அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், வரும் ஹோலி பண்டிகையை முன்னிட்டு நடைபெறவிருந்த கொண்டாட்ட நிகழ்ச்சியை ரத்து செய்வதாக பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

சீனா உட்பட உலகம் முழுவதும் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 90,000ஐ எட்டியுள்ளது. சீனாவைத் தவிர்த்து உலக நாடுகளில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டிவிட்டது. உயிரிழப்பு மூவாயிரத்துக்கும் அதிகமாக இருக்கும் நிலையில், இந்தியாவிலும் தற்போது தில்லி மற்றும் தெலங்கானாவில் தலா ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில்லாமல் இத்தாலியில் இருந்து ஜெய்ப்பூருக்கு சுற்றுலா வந்து தம்பதிக்கும் கரோனா இருப்பது உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →