முகப்பு
இந்தியா

ஆனால் நாம ரொம்ப அதிர்ஷ்டசாலியாம்.. கரோனா குறித்து மத்திய நல்வாழ்வுத் துறை விளக்கம்

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் அது பற்றிய முக்கியத் தகவல்களையும், அறிவுறுத்தல்களையும் மத்திய நல்வாழ்வுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:09 PM
பகிர்:

புது தில்லி: இந்தியாவில் கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் அது பற்றிய முக்கியத் தகவல்களையும், அறிவுறுத்தல்களையும் மத்திய நல்வாழ்வுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.

மத்திய நல்வாழ்வுத்துறை அமைச்சக இணைச் செயலாளர் லாவ் அகர்வால் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியாவில் தற்போது 73 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அதிர்ஷ்டவசமாக கரோனா தொற்று சமூக தொற்றுநோயாக மாறவில்லை. வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கும், அவர்கள் மூலமாக அவர்களுடன் இருந்த குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே கரோனா பரவியுள்ளது. எனவே, வெளியிடங்களுக்குச் செல்லும் போது ஒருவர் தேவையான இடைவெளியை விட்டுவிட்டால், முகக் கவசம் என்பதே தேவைப்படாது, அதே சமயம் அச்சப்படவும் வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், நமது நாட்டில் தற்போது 52 பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 56 பரிசோதனை மாதிரிகளை சேகரிக்கும் மையங்கள் உள்ளன. ஏற்கனவே 1 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வந்த 10,57,506 பேருக்கு விமான நிலையத்தில் இதுவரை மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

ஈரானில் சிக்கித் தவித்து வரும் மாணவர்கள், மீனவர்கள் உட்பட 108 பேரின் ரத்த மற்றும் சளி மாதிரிகள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவை எய்ம்ஸில் உள்ள பரிசோதனைக் கூடத்தில் பரிசோதனை செய்யப்படுகிறது.

மேலும் ஈரானில் சிக்கியிருக்கும் 400 இந்தியர்களின் ரத்த மற்றும் சளி மாதிரிகளை எடுத்து வர 6 மருத்துவ நிபுணர்கள் அந்நாட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அகர்வால் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.