இந்தியா

ஹைட்ரோ கார்பன்: சுற்றுச்சூழல் விதிமுறைகளை தளர்த்தவில்லை

 நமது நிருபர்

ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கான சுற்றுப்புறச் சூழல் விதிமுறைகளிலிருந்து மத்திய அரசு தளர்த்தவில்லை என்றும் தமிழக அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க காவிரி டெல்டா பகுதி திட்டங்களில் முடிவு எடுக்க மாநில சுற்றுப்புறச் சூழல் மதிப்பீட்டுக் கமிட்டிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும் மத்திய சுற்றுப்புறச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.
 மக்களவையில் வெள்ளிக்கிழமை கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தில் மீனவர்கள் வீடுகள் கட்டுவதற்கான விதிவிலக்கு குறித்த கேள்விக்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரிடம் திமுக உறுப்பினர் கனி மொழி துணைக் கேள்வி எழுப்பினார். அப்போது, "நெற்களஞ்சியமான காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் கீழ் எத்தனை கிணறுகள் முறையான சுற்றுச் சூழல் அனுமதி பெற்று செயல்படுகின்றன?' உள்ளிட்ட வினாக்களை எழுப்பினார். இதற்கு அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் அளித்த பதில் வருமாறு:
 ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்னை வந்து சந்தித்ததுடன், தமிழக முதல் அமைச்சர் அளித்த கடிதத்தையும் அளித்தனர். இது குறித்து விரிவாக ஆலோசித்த மத்திய அரசு, "சுற்றுப்புறச்சூழலுக்கு ஒப்புதல் அளிப்பதிலிருந்து மத்திய அரசு விலகி இருக்காது. தண்ணீர், காற்று போன்றவற்றுக்கு சுற்றுப்புறச்சூழல் சட்ட விதிமுறைகளில் எந்த விலக்கும் அளிக்கப்பட மாட்டாது. முன்பெல்லாம் சுற்றுப்புற சூழல் அனுமதிக்கு கோப்புகள் தில்லிக்கு வரவேண்டிய நிலை இருந்தது. தற்போது, மாநில சுற்றுப்புறச் சூழல் மதிப்பீட்டுக் கமிட்டிகளுக்கு இது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் வழங்கப்படும்' என்று தமிழக அரசுக்கு தெளிவாக தெரிவித்து விட்டோம். இது குறித்து மாநில அரசுக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது என்று ஜாவடேகர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

SCROLL FOR NEXT