முகப்பு
இந்தியா

ராஜஸ்தான் சாலை விபத்தில் புதுமணத் தம்பதி உட்பட 11 பேர் பலி

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்புர் அருகே சொயின்டாரா கிராமத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் புதுமணத் தம்பதி உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:11 PM
பகிர்:


ஜோத்புர்: ராஜஸ்தான் மாநிலம் ஜோத்புர் அருகே சொயின்டாரா கிராமத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் புதுமணத் தம்பதி உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.

புதுமணத் தம்பதிகளான விக்ரம் - சீதா ஆகியோருடன் பெண்கள், குழந்தைகள் அனைவரும் காரில் வந்து கொண்டிருந்த போது சொயின்டாரா கிராமத்துக்கு அருகே எதிரே வந்த டிரக்குடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.  இந்த விபத்தில் காரில் இருந்த 11 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 3 பேர் காயமடைந்தனர்.

இரண்டு வாகனங்களும் சாலையில் மோதிய வேகத்தில் ஒன்று மீது ஒன்று ஏறிவிட்டது. இதனால், கிரெய்ன் வரவழைக்கப்பட்டு இரண்டு வாகனங்களும் பிரித்து, அதில் இருந்து காயமடைந்தவர்களும், உடல்களும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
 

முழு கட்டுரையைப் படிக்க →