முகப்பு
இந்தியா

தெலங்கானாவில் மேலும் ஒருவருக்கு கரோனா உறுதி: முதல்வர் அறிவிப்பு

தெலங்கானாவில் புதிதாக ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 14 மார்ச், 2020 at 3:13 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 9:41 PM


ஹைதராபாத்: தெலங்கானாவில் புதிதாக ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தெலங்கானாவில் ஏற்கெனவே கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நபர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பூரண குணம் அடைந்த நிலையில் நேற்று வீடு திரும்பிய நிலையில், இன்று புதிதாக ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் குறித்து தெலங்கானா சட்டப்பேரவையில் இன்று பேசிய மாநில முதல்வர் சந்திரசேகர ராவ், இந்த தகவலை தெரிவித்தார்.

Advertisement

மேலும் இரண்டு பேரின் ரத்த மாதிரிகள் புணேவில் உள்ள பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும், கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர் இத்தாலி சென்றுவிட்டு திரும்பியதும், அவர் தற்போது காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் முதல்வர் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.