தில்லியில் 50க்கும் மேற்பட்டோர் கூடுவதற்குத் தடை: திருமணத்துக்கு விதிவிலக்கு
தில்லியில் மத, சமூக, கலாசார, அரசியல் உட்பட எந்த விஷயமாக இருந்தாலும் 50க்கும் மேற்பட்டோர் ஓரிடத்தில் கூடுவதற்கு தடை விதித்து முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உத்தரவிட்டுள்ளார்.
புது தில்லி: தில்லியில் மத, சமூக, கலாசார, அரசியல் உட்பட எந்த விஷயமாக இருந்தாலும் 50க்கும் மேற்பட்டோர் ஓரிடத்தில் கூடுவதற்கு தடை விதித்து முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உத்தரவிட்டுள்ளார்.
இதுபோன்ற எந்தவொரு நிகழ்ச்சி மற்றும் போராட்டம் உட்பட எதற்கும் புது தில்லியில் மார்ச் 31ம் தேதி வரை அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புது தில்லியில் ஷஹீன் பாக் மற்றும் ஜமியா மிலியா இஸ்லாமியா பகுதிகளில் கடந்த 90 நாட்களாக குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், திருமணங்களுக்கு தடை விதிக்கவில்லை என்றும், பொதுமக்கள் தாங்களாகவே திருமணத்தை தள்ளிப் போட்டுக் கொள்ளலாம் என்றும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் தில்லி மாநகரில் ஓடும் ஆட்டோ ரிக்சா மற்றும் டாக்ஸிகளை இலவசமாக கிருமி நாசினியைக் கொண்டு தூய்மைப்படுத்திக் கொள்ளலாம் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.
தில்லியில் இதுவரை 7 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், 4 பேர் குணமடைந்து வருகிறார்கள்.