மத்திய அமைச்சர் முரளிதரனுக்கு கரோனா பாதிப்பு இல்லை
மத்திய அமைச்சர் முரளிதரனுக்கு கரோனா பாதிப்பு இல்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாமத்திய அமைச்சர் முரளிதரனுக்கு கரோனா பாதிப்பு இல்லை
மத்திய அமைச்சர் முரளிதரனுக்கு கரோனா பாதிப்பு இல்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் முரளிதரனுக்கு கரோனா பாதிப்பு இல்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 14ஆம் தேதி கரோனா தொடர்பான ஆய்வுக்கூட்டம் கேரளத்தின் திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ சித்ரா திருனல் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் நடைபெற்றது. அதில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வெள்ளமுள்ளி முரளிதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதனிடையே அந்த கூட்டத்தில் பங்கேற்ற மருத்துவர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதைத்தொடர்ந்து மற்றவர்களுக்கு கரோனா பரவக்கூடாது என்ற அடிப்படையில் மத்திய அமைச்சர் முரளிதரன் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.
இந்நிலையில் மருத்துவ பரிசோதனையில் அமைச்சருக்கு கரோனா பாதிப்பு இல்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.