முகப்பு
இந்தியா

கரோனா அச்சம் காரணமாக வெறிச்சோடிய சுற்றுலாத் தலங்கள்

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு  உள்ளானவர்களின் எண்ணிக்கை 120 ஐ எட்டிய நிலையில், முக்கிய சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:12 PM
பகிர்:


சென்னை; இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு  உள்ளானவர்களின் எண்ணிக்கை 120 ஐ எட்டிய நிலையில், முக்கிய சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

பொதுவாக வார நாட்களில் கூட சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்தால் திக்குமுக்காடும் சுற்றலாத் தலங்கள் வார இறுதி நாட்களில் கூட காற்று வாங்குகிறது.

கரோனா வைரஸ் பரவும் என்ற அச்சம் மட்டுமல்லாமல், வெளிநாட்டுப் பயணிகள் அதிகமாக வரும் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வது அவ்வளவு பாதுகாப்பானது அல்ல என்ற பொதுமக்களின் விழிப்புணர்வும் கூட, சுற்றுலாத் தலங்களுக்கு பொதுமக்களின் வருகைக் குறையக் காரணங்களாகிவிட்டன.

இதுபோலவே முக்கிய வழிபாட்டுத் தலங்களிலும் கூட வழக்கமான கூட்டத்தைக் காணமுடியவில்லை. இது நல்ல விஷயமாகவே பார்க்கப்படுகிறது. பள்ளிகளுக்கு விடுமுறை, வேலைக்கும் விடுமுறை என்று நினைத்து ஜாலியாக சுற்றுலாக் கிளம்பிவிடாமல், நாட்டின் தற்போதைய அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு மக்கள் வீட்டிலேயே முடங்கியிருப்பது, பெரிய அளவில் கரோனா பாதிக்காமல் தடுக்க உதவும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தூய்மைப்படுத்தும் பணி..

கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் கடல் அலை என திரளும் கடற்கரை..

இது கோழிக்கோடு கடற்கரை..

ஸ்ரீநகரில் உள்ள அழகிய பூங்கா ஒன்று அமைதியாக..

தாஜ்மகாலில் குறைந்த எண்ணிக்கையிலேயே சுற்றுலாப் பயணிகளின் வருகை இருக்கிறது.

மும்பை கடற்கரையில் எடுத்த புகைப்படம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.