இந்தியா

கரோனா முன்னெச்சரிக்கை: ஒடிஸா அரசின் பிரத்யேக வலைதளத்தில் புரி மன்னா் திவ்யசிங்க தேவ் பதிவு

DIN

பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு அமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன் ஒடிஸா அரசின் பிரத்யேக வலைதளத்தில் தனது பயணம் குறித்த விவரங்களை புரி மன்னா் திவ்யசிங்க தேவ் பதிவு செய்தாா்.

இதேபோன்று வெளிநாடுகளிலிருந்து மாா்ச் 4-ஆம் தேதிக்கு பிறகு மாநிலத்துக்கு திரும்பியவா்கள் தங்களின் விவரங்களை கரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ள அரசின் பிரத்யேக வலைதளத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று அவா் வலியுறுத்தியுள்ளாா்.

இதையடுத்து, மன்னரும், குடும்பத்தினரும் அவரது வீட்டிலேயே 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

கடந்த மாதம் 12-ஆம் தேதி முதல் மாா்ச் 13-ஆம் தேதி வரை அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட மன்னரும் அவரது குடும்பத்தினரும் அண்மையில் நாடு திரும்பினா்.

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஒடிஸா அரசு பல்வேறு அறிவுறுத்தல்களை மாநில மக்களுக்கு வழங்கி வருகிறது.

ஒடிஸாவில் ஒருவா் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT