முகப்பு
இந்தியா

சண்டீகரில் முதல் நபருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி

பஞ்சாப் மாநிலம் சண்டீகரில் இளம்பெண் ஒருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:13 PM
பகிர்:

பஞ்சாப் மாநிலம் சண்டீகரில் இளம்பெண் ஒருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சீனாவைத் தொடர்ந்து உலக நாடுகளில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவிவரும் நிலையில் சர்வதேச அளவில் இதுவரை 8500க்கும் மேற்பட்டோர் பலி வாங்கியுள்ளது. இந்தியாவில் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 160-ஐ தாண்டியுள்ளது. 

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், பஞ்சாப் மாநிலம் சண்டீகரில் 23 வயது இளம் பெண் ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

லண்டனிலிருந்து திரும்பிய இளம்பெண்ணின் இரத்த மாதிரிகளை பிஜிஐஎம்ஆர் சோதனை மையத்தில் சோதனை செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து பாதிக்கப்பட்ட இளம்பெண் தனிமைப்படுத்தப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சண்டீகரில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இவர் முதல் நபர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.