முகப்பு
இந்தியா

மும்பை அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து: ஒருவர் பலி 

மும்பை, பாந்த்ரா பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:13 PM
பகிர்:

மும்பை, பாந்த்ரா பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

பந்த்ராவின் சீ ஸ்பிரிங் கட்டடத்தின் ஆறாவது மாடியில் உள்ள பிளாட்டில் இன்று காலை 7.30 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

சம்பவ இடத்துக்குத் தீயணைப்பு வாகனம் விரைந்துசென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் வீட்டிற்கு எதிரே இந்த அடுக்குமாடி கட்டடம் அமைந்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.