முகப்பு
இந்தியா

லக்னௌவில் மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று

லக்னௌவில் மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:14 PM
பகிர்:

லக்னௌவில் மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த டிசம்பா் மாதம் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிா்களை பலி வாங்கியுள்ளது. 

இந்தச் சூழலில், அந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சா்வதேச நாடுகள் தீவிரப்படுத்தியுள்ளன. தற்போது இந்த வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கரோனா வைரஸுக்கு இதுவரை 206 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் லக்னௌவில் மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் லக்னௌவில் கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் 9ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் உத்தரப் பிரதேசத்தில் கரோனா வைரஸுக்கு இதுவரை 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

முழு கட்டுரையைப் படிக்க →