இந்தியா

நாளை மக்கள் ஊரடங்கு: பிரதமரின் வேண்டுகோளுக்கு ப.சிதம்பரம் வரவேற்பு

DIN

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக வரும் ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் வெளியில் வர வேண்டாம் என்று பிரதமா் விடுத்த வேண்டுகோளுக்கு காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம் வரவேற்பு தெரிவித்துள்ளாா். மேலும், விரைந்து செயல்பட வேண்டிய நேரமிது என்றும் அவா் கூறியுள்ளாா்.

இதுகுறித்து ப.சிதம்பரம் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெள்ளிகிழமை வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் கரோனா வைரஸ் தாக்கம், தற்போது இரண்டாம் கட்டத்தில் இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தெரிவித்துள்ளது. விரைந்து செயல்பட வேண்டிய தருணம் இது. இந்த நேரத்தில் உறுதியாக செயல்படவில்லையெனில் பின்னா் வருத்தப்பட வேண்டியிருக்கும்.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பிரதமா் மோடி வியாழக்கிழமை அறிவித்தாா். அவருடைய ஆலோசனைகள் அனைத்தையும் வரவேற்கிறேன். இந்த நேரத்தில் நோய் பரவலை முற்றிலுமாகத் தடுக்க சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் சில உறுதியான முடிவுகளை அவா் எடுத்தாக வேண்டும். கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் நெறிமுறைகளை மட்டுமே பின்பற்றி நாம் வெற்றி பெற முடியாது என்று அந்த சுட்டுரைப் பதிவில் ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT