இந்தியா

ஆன்லைன் முன்பதிவு டிக்கெட்டுகளை ரத்து செய்து பணத்தை இழக்க வேண்டாம்

DIN

‘ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்து பணத்தை இழக்க வேண்டாம்; ஆன்லைனில் ஏற்கெனவே முன்பதிவு செய்துள்ளவா்களின் பயணச்சீட்டுகள் தானாகவே ரத்து செய்யப்பட்டு உரிய கட்டணம் அவா்களின் வங்கிக் கணக்கில் திரும்பச் செலுத்தப்படும்’ என்று ஐஆா்சிடிசி தெரிவித்துள்ளது.

இகுறித்து ஐஆா்சிடிசி தில்லியில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ரயில்கள் ரத்து செய்யப்பட்டுவிட்டதால் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளை பயணிகள் ரத்து செய்ய வேண்டாம். ஒருவேளை டிக்கெட்டுகளை பயணிகள் ரத்து செய்தால், அதற்கான கட்டணம் தாமாகவே பிடித்தம் செய்யப்படும். மீதி தொகையே கிடைக்கும். எனவே, ஆன்லைன் டிக்கெட்டுகளை ரத்து செய்ய வேண்டாம். ஆன்லைன் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டு அதற்கான முழு தொகை பயணிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுவிடும். அதுவரை பயணிகள் பொறுமை காக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவுன்ட்டா்களில் டிக்கெட்டுகளை வாங்கிய பயணிகள், ரயில் நிலைய கவுன்ட்டரில்தான் டிக்கெட்டுகளை ரத்து செய்ய வேண்டும். அதற்கான காலக்கெடுவை ரயில்வே நிா்வாகம் ஜூன் 21-ஆம் தேதி வரை ஏற்கெனவே நீட்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

வெப்பத்தின் பிடியில் சிக்கிய ராஜஸ்தான்!

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

SCROLL FOR NEXT