இந்தியா

கரோனா அச்சுறுத்தல்: பிளிப்கார்ட் நிறுவன சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

DIN

புதுதில்லி: கரோனா வைரஸ் தொற்று அச்சுறுதலை அடுத்து நாடு முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் விற்பனை நிறுவனமான பிளிப்கார்ட் தனது சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. 

ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனமான அமேசான் இந்தியா நிறுவனம் தனது அனைத்து சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ஏற்ககெனவே அறிவித்துள்ளது. இந்த நிலையில் மற்றொரு ஆன்லைன் விற்பனை நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனமும் தனது அனைத்து சேவைகளையும் தற்காலிகமாக நிறுவத்துவதாக அறிவித்துள்ளது. 

கரோனா அச்சுறுத்தலை அடுத்து அதனை கையாள்வதற்கு ஒரே வழி "சமூக இடைவெளிதான்" எனக் கூறி நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் வீடுகளில் இருந்து வெளியே செல்லாமல் அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி தேசத்திற்கு உதவுவோம்.  இதுவொரு கடினமான நேரம். இதுபோன்று முன்பு எப்போதும் இருந்ததில்லை. உங்களின் அவசரமான தேவைகளுக்கு சேவை செய்வதே எங்கள் முன்னுரிமையாக இருந்தன, எங்களின் ஊழியர்களின் பாதுகாப்பையும் உறுதிசெய்ய வேண்டிய நிலையில் உள்ளோம். எனவே அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். விரைவில் நாங்கள் உங்களுக்கான சேவைகளை மீண்டும் தொடங்குவதாக நிறுவனம் உறுதியளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT