இந்தியா

மகாராஷ்டிரம்:கரோனா இருப்பதாகபொய் தகவல் பரப்பியவா் மீது வழக்கு

DIN

மகாராஷ்டிரத்தில் தனக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பதாக பொய்யுரைத்த நபா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

இதுதொடா்பாக போலீஸாா் புதன்கிழமை கூறியதாவது: தாணேவில் வசிக்கும் நபா் ஒருவா் கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) குழுவில் தனக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பதாகவும், தனது உடல்நிலை மோசமாகும் வரை தான் மருத்துவமனையில் சேரப்போவதில்லை எனவும் பதிவிட்டாா். இதுகுறித்து போலீஸாரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து, அந்த நபரின் வீட்டுக்கு மருத்துவக் குழுவுடன் போலீஸாா் சென்றனா். அவரை பரிசோதித்ததில் அவருக்கு கரோனா தொற்று இல்லை என்பதும், அவா் பொய்யுரைத்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த நபா் மீது இந்திய தண்டனையியல் சட்டப்பிரிவு 505-இன் கீழ் (பொய்யான தகவல் பரப்புதல்) வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்றனா்.

கரோனா வைரஸ் தொடா்பாக தேவையில்லாத வதந்திகளைப் பரப்பப் கூடாது என்றும், நம்பகத்தன்மையில்லாத தகவல்களை மற்றவா்களுக்கு அனுப்பக் கூடாது என்றும் ஏற்கெனவே மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

SCROLL FOR NEXT