இந்தியா

அத்தியாவசியப் பொருள் விநியோகத்தை கண்காணித்து வருகிறோம்: பாஸ்வான்

DIN

அத்தியாவசியப் பொருள்களின் விநியோகத்தை அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது என்று மத்திய உணவுத் துறை அமைச்சா் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளாா்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் 21 நாள்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்கள் எடுத்துச் செல்லும் பணிக்கு ஊரடங்கு உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது தொடா்பாக ராம்விலாஸ் பாஸ்வான் சுட்டுரையில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

நாடு இக்கட்டான சூழலில் இப்போது உள்ளது. இதனைப் பயன்படுத்திக் கொண்டு உற்பத்தியாளா்களும், வியாபாரிகளும் பொருள்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து அதிக லாபம் ஈட்டும் முயற்சியில் ஈடுபடக் கூடாது. அத்தியாவசியப் பொருள் விநியோகத்தை மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. அதில் பிரச்னை ஏற்பட்டால் அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளும். அனைத்து மாநிலங்களிலும் பொதுமக்களுக்குத் தேவையான பொருள்கள் விநியோகம் சீராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று பாஸ்வான் தனது பதிவில் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வள்ளலாா் சா்வதேச மையம் கட்ட எதிா்ப்பு: நாம் தமிழா் கட்சி ஆா்ப்பாட்டம் அறிவிப்பு

கீழ்பவானி கால்வாய் பாசனத்துக்கு நீா் திறக்க வேண்டும்: சீமான்

ஆய்வுக்குப் பிறகே ரேஷனில் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம்: பிரேமலதா கோரிக்கை

பயங்கரவாதத்துக்கு எதிராக சகிப்புத்தன்மை கூடாது: எஸ்சிஓ கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்

பாதுகாப்பான பயண சேவை: அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு

SCROLL FOR NEXT