முகப்பு
இந்தியா

கிரிக்கெட் விளையாடும் பெட்ரோல் பங்க் ஊழியர்கள்; வைரல் விடியோ

கரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் வீட்டுக்குள் முடங்கியுள்ளதால் சாலைகள் முழுவதும் வெறிச்சோடி காணப்படுகின்றன.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 10:07 AM
பகிர்:

விசாகப்பட்டினத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் வேலை செய்யும் இடத்திலேயே கிரிக்கெட் விளையாடும் விடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

கரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் வீட்டுக்குள் முடங்கியுள்ளதால் சாலைகள் முழுவதும் வெறிச்சோடி காணப்படுகின்றன.

அதேநேரத்தில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க மளிகைக் கடைகள், மருந்தகங்கள், காய்கறிக் கடைகள் உள்ளிட்டவை குறிப்பிட்ட நேரத்திற்கு திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பெட்ரோல் பங்குகளும் திறந்துள்ளன. ஆனால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வாகனங்களின் வருகை மிகவும் குறைவாகவே உள்ளது. 

இந்த நிலையில், விசாகப்பட்டினத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் வேலை செய்யும் இடத்திலேயே கிரிக்கெட் விளையாடும் விடியோ ஒன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

வேலை குறைவாக இருந்த காரணத்தால் ஊழியர்கள் அவ்விடத்திலேயே கிரிக்கெட் விளையாடுன்றனர். இதற்கு சமூக வலைதளத்தில் பல கலவையான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. 

முழு கட்டுரையைப் படிக்க →