இந்தியா

உ.பியில் ஊரடங்கு உத்தரவை மீறி தொழுகை: 20 போ் மீது வழக்குப்பதிவு

DIN


பஹ்ரைச்: உத்தரப் பிரதேசத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி தொழுகையில் ஈடுபட்ட 15 முதல் 20 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

இதுகுறித்து அந்த மாநில போலீஸாா் வியாழக்கிழமை கூறியதாவது: நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஆஸாத்நகரின் ரிசியா பகுதியில் உள்ள பள்ளிவாசலில் 15 முதல் 20 போ் தொழுகை மேற்கொள்ள புதன்கிழமை இரவு கூடினா். ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக அவா்கள் மீது இந்திய தண்டனையியல் சட்டப்பிரிவு 188-இன் (அரசு உத்தரவுக்கு கீழ்படியாமை) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதேபோல் ஊரடங்கு உத்தரவை மீறியவா்களுக்கு எதிராக 11 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் வலம் வந்த 195 வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 90 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் ரூ. 3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய இழப்பீடு கோரி உச்சநீதிமன்றத்தில் மனு: நிபுணா் குழு அமைக்கவும் வலியுறுத்தல்

சல்மான் கான் வீட்டில் துப்பாக்கிச்சூடு: கைதானவா் போலீஸ் காவலில் தற்கொலை

மருத்துவ மாணவா்களின் மன நலனை ஆய்வு செய்கிறது என்எம்சி

பொய்களை தொடா்ந்து உரக்கக் கூறுவதே காங்கிரஸ் பிரசார உத்தி: அமித் ஷா விமா்சனம்

குடிநீா் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT