முகப்பு
இந்தியா

மும்பையில் உயிரிழந்த மருத்துவருக்கு கரோனா இருந்தது உறுதி

மும்பையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்த மருத்துவருக்கு கரோனா இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:18 PM
பகிர்:

மும்பை: மும்பையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்த மருத்துவருக்கு கரோனா இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மும்பையில் கரோனா அறிகுறியுடன் சிகிச்சைப் பெற்று வந்த 85 வயது மருத்துவர் வெள்ளிக்கிழமை மரணம் அடைந்தார்.

அவருக்கு முன்னதாக நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில், 85 வயது மருத்துவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, மகாராஷ்டிரத்தில் கரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 850-ஐ தாண்டியுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 20-ஐ எட்டியிருக்கும் நிலையில், நாட்டிலேயே கரோனா பாதித்தோரின் எண்ணிக்கையில் மகாராஷ்டிரம் முதல் இடத்தில் உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.