புது தில்லி: பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட்சிம் கார்டுகளின் இணைப்பு ஏப்ரல் 20-வரை துண்டிக்கப்படாது என்று மத்திய தபால் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உறுதியளித்துள்ளார்.
மத்திய தபால் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் திங்களன்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச பிஎஸ்என்எல் தலைமை அதிகாரிகள் மற்றும் தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனெரல் ஆகியோருடன் ‘விடியோ கான்பரன்சிங்’ முறையில் ஆலோசனை நடத்தினார்.
அதற்குப் பிறகு செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
இரண்டு துறைகளுமே இந்த சிக்கலான காலகட்டத்திலும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. கட்டணம் ஏதும் கட்டா விட்டாலும் பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட்சிம் கார்டுகளின் இணைப்பு ஏப்ரல் 20-வரை துண்டிக்கப்படாது; அத்துடன் ஏழை மக்கள் மற்றும் தேவையான சூழலில் இருப்பவர்கள் இந்த தருணத்தில் இருப்பவர்கள் இப்போது கால்கள் செய்வதற்கு ஏதுவாக அவர்கள் கணக்கில் ரூ.10 சேர்க்கப்படும்.
தபால் துறையானது ஏழை மக்களுக்காக தொடர்ந்து மணி ஆர்டர்களை அனுப்பி வருகிறது. ஆதார் தொடர்புடைய தொகைகளும் சரியாகச் செலுத்தப்பட்டு வருகின்றன. மருந்து பொருட்கள் உள்ளிட்டவையும் தபால் துறை மூலம் தொடர்ந்து சரியாக அனுப்பபட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.