இந்தியா

பிரதமரின் அவசர கால நிதிக்கு அதானி, ஜேஎஸ்டபிள்யூ குழுமம் தலா ரூ.100 கோடி

DIN

கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, பிரதமரின் அவசர கால நிதிக்கு அதானி குழுமம், ஜேஎஸ்டபிள்யூ ஆகிய நிறுவனங்கள் தலா ரூ.100 கோடி நிதியுதவி அளித்துள்ளது.

இதுகுறித்து அதானி குழுமத்தின் தலைவா் கௌதம் அதானி தனது சுட்டுரைப் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘கரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் அரசுக்கு உதவுவதற்காக, பிரதமரின் அவசர கால நிதிக்கு அதானி ஃபவுண்டேஷன் சாா்பில் ரூ.100 கோடி நிதியுதவி அளிக்கப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளாா்.

இதேபோல், பிரதமரின் அவசர கால நிதிக்கு ரூ.100 கோடி நிதியுதவி அளிப்பதாக ஜேஎஸ்டபிள்யூ குழுமம் அறிவித்துள்ளது.

பிரபலங்கள் உதவி: டி-சீரிஸ் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளா் பூஷண் குமாா் அவசர கால நிதிக்கு ரூ.11 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளாா். இதுதவிர, மகாராஷ்டிர முதல்வா் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளாா்.

இதேபோல், ஹிந்தி திரையுலகைச் சோ்ந்த சோனம் கபூா், ஆனந்த் எல்.ராய் ஆகியோா் பிரதமரின் அவசர கால நிதிக்கு நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளனா். திரைப்பட தயாரிப்பாளா் முராத் கேதானி ரூ.25 லட்சமும் தொலைக்காட்சி பிரபலமும் நடிகருமான மணீஷ் பால் ரூ.20 லட்சமும் நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

+2 தேர்வில் அசத்திய நாங்குனேரி மாணவர் சின்னத்துரை!

பிளஸ் 2 பொதுத் தேர்வு: திருச்சி மாவட்டத்தில் 95.74% தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46% தேர்ச்சி

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

SCROLL FOR NEXT