புது தில்லி: தில்லி நிசாமுதீனில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு எதிராக காவல்துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 1251 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 32 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் கரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கடந்த 24-ஆம் தேதி நள்ளிரவு முதல் வரும் ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தில்லி நிசாமுதீன் பகுதியில் செயல்பட்டு வரும் “தப்லிக் இ ஜமாஅத்” என்னும் இஸ்லாமிய பிரிவின் சார்பாக கடந்த 17-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை இஸ்லாமிய மாநாடு ஒன்று நடைபெற்றுள்ளது. இதில் நாடு முழுவதிலும் இருந்து பேருக்கு மேல் பங்கு பெற்றுள்ளனர். இம்மாநாட்டில் கரோனா பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து வந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்டோரும் பங்கு பெற்றுள்ளனர். தற்போது இந்த மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு ஊர் திரும்பிய பலருக்கும் கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் தில்லி நிசாமுதீனில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு எதிராக காவல்துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது.
தில்லியைச் சேர்ந்த சமூக செயல்பாட்டாளர் அஜய் கவுதம் என்பவர் காவல்துறையில் அளித்துள்ள புகாரில், தப்லிக் இ ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது ஊரடங்கு சமயத்தில் மாநாட்டை நடத்தியதன் மூலமாக தகவலை மறைத்தல் மற்றும் இந்தியாவில் கரோனாவை பரப்பியதன் மூலம் கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிய கோரிக்கை வைத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.