முகப்பு
இந்தியா

புணே மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் 4 பேர் பலி: ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 99ஆக உயர்வு

புனே மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் 4 பேர் பலியாகியுள்ளனர். 

Updated On : 1 மே, 2020 at 5:49 PM
பகிர்:

புணே மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் 4 பேர் பலியாகியுள்ளனர். 

இந்தியாவில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1,993 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தகவல் தெரிவித்துள்ளார். தற்போது 35,043 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்பு 1,147 ஆக உள்ளது.

இதுவரை மொத்தம் 8,888 பேர் குணமடைந்துள்ளனர். நாட்டிலேயே கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. இந்த நிலையில் புணே மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் 4 பேர் பலியாகியுள்ளதாக அம்மாவட்ட சுகதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

Advertisement

இத்துடன் அம்மாவட்டத்தில் கரேனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 99ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் தற்போது வரை 10,498 பேர் இந்நோய்த்தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். அவர்களின் 459 பேர் பலியான நிலையில் 1,773 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.