பிகார் மாநிலத்தில் கடந்த 12 மணி நேரத்தில் மேலும் 18 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை செயலாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் கரோனா தொற்று பல்வேறு மாநிலங்களில் தீவிரமாகப் பரவி வரும் நிலையில் பிகாரிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
கரோனா பாதிப்பு குறித்து அம்மாநில சுகாதாரத்துறை செயலாளர் சஞ்சய் குமார் இன்று வெளியிட்டுள்ள தகவலில் கூறியதாவது:
ஆந்திரத்தில் இன்று மேலும் 18 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 450 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், 82 பேர் கரோனா தொற்று நோயிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை இருவர் உயிரிழந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.