இந்தியா

முகக்கவசம் அணியாதவர்களுக்கு பெட்ரோல், ரேஷன் பொருள்கள் இல்லை: கோவா அரசு அறிவிப்பு

DIN

முகக்கவசம் அணியாதவர்களுக்கு பெட்ரோல், ரேஷன் பொருள்கள் இல்லை என கோவா அரசு அறிவித்துள்ளது. 

தற்போதைய நிலவரப்படி கரோனா நோய்த் தொற்று இல்லாத மாநிலமாக கோவா இருந்து வருகிறது. கரோனா இல்லா மாநிலம் என்ற நிலையை நாம் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள அரசு அறிவித்துள்ள விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது. 

இந்நிலையில், வெளியில் வரும்போது முகக்கவசம் அணியாதவர்களுக்கு பெட்ரோல் பம்புகளில் எரிபொருள், நியாய விலைக்கடைகளில் ரேஷன் பொருள்கள் வழங்கப்படாது என்று கோவா அரசு அறிவித்துள்ளது.

வியாழக்கிழமை தலைமைச் செயலாளர் பரிமல் ராய் தலைமையில் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயோத்தியில் ஜெயிக்குமா பாஜக?

கவலை அளிக்கும் உடல் பருமன் பிரச்னை

கை கோக்கும் மாநகர கயவர்

தேவையற்ற விவாதம்!-"கோவிஷீல்டு' தடுப்பூசி பற்றிய தலையங்கம்

படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து வட மாநில தொழிலாளி பலி

SCROLL FOR NEXT