கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல்களை பல்வேறு மாநிலங்கள் வெளியிட்டுள்ளன.
தில்லி:
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 427 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 4,549 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 64 பேர் பலியாகியுள்ளனர்.
தெலங்கானா:
இன்று புதிதாக 21 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 508 ஆக உள்ளது. 29 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை 545 பேர் குணமடைந்துள்ளனர்.
பிகார்:
பிகாரில் இன்று 13 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் மொத்தம் 516 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிரம்:
மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 678 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 27 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 12,974 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 548 பேர் பலியாகியுள்ளனர்.
ராஜஸ்தான்:
ராஜஸ்தானில் புதிதாக 114 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 2,886 ஆகவும், மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 71 ஆகவும் உள்ளது.
ஜார்கண்ட்:
ஜார்கண்ட் மாநிலத்தில் இரவு 8 மணி வரை புதிதாக யாருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்படவில்லை. மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 115 ஆக உள்ளது. 27 பேர் குணமடைந்துள்ளனர்.
குஜராத்:
குஜராத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 374 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 5,428 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 1,024 பேர் குணமடைந்துள்ளனர். 290 பேர் பலியாகியுள்ளனர்.
சண்டிகர்:
சண்டிகரில் மொத்தம் 97 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் பலியாகியுள்ளார். 19 பேர் குணமடைந்துள்ளனர். 75 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பஞ்சாப்:
பஞ்சாபில் மேலும் 331 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 1,102 ஆக உயர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.