இந்தியா

அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்தது 1,000 டோஸ் "ரெம்டெசிவிர்' மருந்து

கரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சைக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ள "ரெம்டெசிவிர்' மருந்து 1,000 டோஸ்கள்  அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. 

DIN


புது தில்லி: கரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சைக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ள "ரெம்டெசிவிர்' மருந்து 1,000 டோஸ்கள்  அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. 

கரோனா நோய்த்தொற்றுக்கான சிகிச்சையில் இந்த மருந்து தகுந்த பலனளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா சிகிச்சைக்கு "ரெம்டெசிவிர்' மருந்தினை அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து ஆணையம் அங்கீகரித்துள்ளது. 

அமெரிக்காவைச் சேர்ந்த தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் (என்ஐஏஐடி) மேற்கொண்ட பரிசோதனையின்படி, "பிளாசிபோ' மருந்து கொடுக்கப்பட்ட கரோனா நோயாளிகளுடன் ஒப்பிடுகையில், "ரெம்டெசிவிர்' மருந்து கொடுக்கப்பட்ட கரோனா நோயாளிகள் விரைவில் குணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனினும், ஹெபடைடிஸ் மற்றும் எபோலா நோய்த் தாக்கத்தின்போது பல நோயாளிகளுக்கு "ரெம்டெசிவிர்' மருந்து கொடுத்து பரிசோதித்தபோது, அது உரிய பலனளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த மருந்துக்கான மூலக்கூறுகளை இந்திய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். எனினும், ரெம்டெசிவிருக்கான காப்புரிமையை அமெரிக்காவைச் சேர்ந்த "கிலியாட் சைன்சஸ்' நிறுவனம் பெற்றுள்ளது. எனவே, அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளும் இந்திய நிறுவனமே நாட்டில் "ரெம்டெசிவிர்' மருந்தை தயாரிக்க இயலும். 

இதுகுறித்து சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநர் சேகர் மண்டே கூறுகையில், "ரென்டெசிவிர் மருந்தை இந்திய சந்தைக்கு கொண்டுவருவது தொடர்பாக அதற்கான காப்புரிமையை பெற்றுள்ள கிலியாட் சைன்சஸ் நிறுவனமே முடிவு செய்யும். 

இந்தியாவில் சர்வதேச காப்புரிமையை பெறுவதற்கு "கட்டாய உரிமம்', "விருப்ப உரிமம்' என இரு முறைகள் உள்ளன. எனினும், இதுதொடர்பான முடிவு அந்த நிறுவனம் மேற்கொள்ளும் பேச்சுவார்த்தையை பொருத்தே அமையும்' என்றார். 

கிலியாட் சைன்சஸ் நிறுவனத்தின் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான டேனியல் ஓடே கடந்த வாரம் கூறுகையில், "ரெம்டெசிவிர் மருந்தின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை சர்வதேச அளவுக்கு விரிவுபடுத்துவதற்காக மருந்து தயாரிப்பாளர்களின் உலகளாவிய கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்த முயன்று வருகிறோம். 

போதிய அளவு மருந்து கிடைப்பதை உறுதி செய்வதற்கு உலக நாடுகள் இணைந்து பணியாற்ற வேண்டியது அவசியமாகும்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி விதிப்பு தீர்ப்பு எதிரொலி: சென்செக்ஸ் 479.95 புள்ளிகள் உயர்வு!

த்ரிஷ்யம் - 3 மோகன்லால் போஸ்டர்!

தவெக வார்டு செயலாளர்... தாய் கிழவி டிரைலர்!

முடிந்த ஓராண்டிற்குள் மீண்டும் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடர்!

தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு! பேசியது என்ன?

SCROLL FOR NEXT