முகப்பு
இந்தியா

நவ்ஷேரா பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்; இந்தியா தக்க பதிலடி

ஜம்முவின் ரஜௌரி மாவட்டத்தில் இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் நவ்ஷேரா செக்டார் அருகே பாகிஸ்தான் ராணுவம் இன்று மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.

Updated On : 4 மே, 2020 at 6:25 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:05 PM


ஜம்மு: ஜம்முவின் ரஜௌரி மாவட்டத்தில் இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் நவ்ஷேரா செக்டார் அருகே பாகிஸ்தான் ராணுவம் இன்று மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.

இது குறித்து இந்திய பாதுகாப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இன்று மாலை 4 மணியளவில் நவ்ஷேரா செக்டார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்களை நடத்தியது.

இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

இதேபோன்று ரஜௌரி மாவட்டத்தின் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் ஞாயிறன்றும் தாக்குதல் நடத்திய நிலையில், இன்று மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.