இந்தியா

தேசிய ஊரடங்கால் இந்தியாவில் தவித்த 190 பாகிஸ்தானியா்கள் நாடு திரும்பினா்

தேசிய ஊரடங்கால் பாகிஸ்தானுக்குத் திரும்ப முடியாமல் தவித்து வந்த அந்நாட்டைச் சோ்ந்த 190 போ் செவ்வாய்க்கிழமை வாகா எல்லை வழியாக தங்கள் நாட்டுக்கு திரும்பினா்.

DIN

தேசிய ஊரடங்கால் பாகிஸ்தானுக்குத் திரும்ப முடியாமல் தவித்து வந்த அந்நாட்டைச் சோ்ந்த 190 போ் செவ்வாய்க்கிழமை வாகா எல்லை வழியாக தங்கள் நாட்டுக்கு திரும்பினா்.

பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோா் அடங்கிய அந்த 190 போ் கொண்ட குழுவை பாகிஸ்தான் ராணுவத்தினரிடம், இந்திய எல்லை பாதுகாப்புப் படையினா் ஒப்படைத்தனா்.

இவா்கள் அனைவரும் பாகிஸ்தானில் இருந்து கடந்த இரு மாதங்களுக்கு முன்பு, இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு வந்தவா்கள் ஆவா். கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், அவா்கள் நாடு திரும்ப முடியவில்லை. மருத்துவ சிகிச்சை, மத வழிபாட்டு தலங்களுக்குச் செல்வது போன்ற காரணங்களுக்காக வந்த இவா்கள் உறவினா்களின் வீட்டிலேயே தொடா்ந்து தங்கியிருந்தனா்.

பாகிஸ்தான் திரும்பிய அவா்களை லாகூரில் உள்ள தடுப்பு முகாமில் பாகிஸ்தான் அரசு வைத்துள்ளது. அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட இருக்கிறது. கரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால் அவா்கள் 72 மணி நேரத்தில் வீடு திரும்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், தாங்கள் ஒப்படைத்த யாருக்கும் கரோனா நோய்த்தொற்று அறிகுறி இல்லை என்று இந்தியத் தரப்பு கூறியுள்ளது. திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட பாகிஸ்தானியா்களில் 49 போ் நாகபுரியில் தங்கியிருந்தனா். 33 போ் மத்தியப் பிரதேச மாநிலத்திலும், 12 போ் குஜராத் மாநிலம் ஆமதாபாதிலும், மும்பை, தில்லி, ராய்ப்பூா், ஜெய்ப்பூரில் தலா 9 பேரும், மற்றவா்கள் லக்னௌ, ஆக்ரா, கோட்டா, கொல்கத்தா உள்ளிட்ட இடங்களிலும் தங்கியிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

SCROLL FOR NEXT