முகப்பு
இந்தியா

ஒடிசாவில் மேலும் ஒருவருக்குத் தொற்று: மொத்த பாதிப்பு 170 ஆனது

ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் கரோனா வைரஸுக்கு பாதிக்கப்பட்டுள்ளார். அந்த மாநிலத்தில் மொத்தப் பாதிப்பு 170 ஆக உயர்ந்துள்ளது

Updated On : 5 மே, 2020 at 11:10 AM
பகிர்:

புவனேஸ்வர்: ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் கரோனா வைரஸுக்கு பாதிக்கப்பட்டுள்ளார். அந்த மாநிலத்தில் மொத்தப் பாதிப்பு 170 ஆக உயர்ந்துள்ளது. 

புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் கஞ்சம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார். பாதிப்பு எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. 109 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 60 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். 

கடந்த ஏப்ரல் 6-ம் தேதி ஒருவர் பலியாகியுள்ளார். ஒடிசாவில் திங்களன்று 3,535 இரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 44,663 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Advertisement

ஜாஜ்பூர் (52) அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் பதிவாகியுள்ளன. குர்தா மாவட்டத்தின் புவனேஸ்வரில் (47), பாலசூர் மற்றும் பத்ராக் ஆகிய இடங்களில் தலா 21, சுந்தர்கரில் 11 மற்றும் கஞ்சாமில் மூன்று வழக்குகள் பதிவாகியுள்ளன.

ஜார்சுகுடா, கேந்திரபாரா, போலங்கிர், கியோஞ்சர் மற்றும் கலஹந்தி ஆகிய இடங்களில் தலா இரண்டு வழக்குகள் மற்றும் கட்டாக், பூரி, தெங்கனல், தியோகர் மற்றும் கோராபுட் மாவட்டங்களில் தலா ஒரு வழக்குகள் பதிவாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.