ராஜஸ்தானில் மேலும் 35 பேருக்கு கரோனா; உயிரிழப்பு 90 ஆக உயர்வு
ராஜஸ்தானில் கடந்த 12 மணி நேரத்தில் மேலும் 35 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் கடந்த 12 மணி நேரத்தில் மேலும் 35 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக ராஜஸ்தானும் உள்ளது.
இந்நிலையில், ராஜஸ்தானில் கடந்த 12 மணி நேரத்தில் மேலும் 35 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் .
இதையடுத்து மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 3,193 ஆகவும் உயிரிழப்பு 90 ஆகவும் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் 1,536 பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.
இந்தியாவில் கரோனா பாதிப்பு 49,391 ஆகவும் உயிரிழப்பு 1,694 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.