தில்லியில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 206 போ் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,104 - அதிகரித்தது.
தொடா்ந்து மூன்று நாள்களாக உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை என்றும் இதனால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 64ஆக உள்ளது என்றும் தில்லி அரசு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், தற்சமயம் 1468 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிவிட்டதாகவும், 17 பேர் வென்டிலேட்டர் வசதியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.
தில்லியில் தற்போது கரோனா பாதித்த நோயாளிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் கால அளவு 11 நாட்களாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.