இந்தியா

ஆந்திரத்தைத் தொடர்ந்து சத்தீஸ்கரிலும் வாயு கசிவு: 7 தொழிலாளர்கள் பாதிப்பு

DIN


சத்தீஸ்கரில் காகித ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் 7 பேர் வாயு கசிவால் பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சத்தீஸ்கரில் செயல்பட்டு வரும் காகித ஆலையில், ரசாயன தொட்டியை தொழிலாளர்கள் 7 பேர் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை சுத்தம் செய்து வந்தனர். அப்போது வாயு கசிந்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து 7 தொழிலாளர்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டு அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுபற்றி ராய்கார் எஸ்பி தெரிவிக்கையில், "ஆலை உரிமையாளரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் வியாழக்கிழமை அதிகாலை நடைபெற்றது" என்றார்.

முன்னதாக, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று காலை ஏற்பட்ட விஷவாயு கசிவில் இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர். இந்த ஆலையின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 1,000 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அன்பே, நீ கலைகளின் தொகுப்பு... சாக்க்ஷி மாலிக்!

‘கீழ்த்தரமான பேச்சு’: பாஜக வேட்பாளர் பிரசாரம் செய்ய தடை!

கடலோரக் கவிதை!

சென்னை விமான நிலையத்தில் தூக்கி எறியப்படும் தங்கம்? மிரண்டுபோன அதிகாரிகள்

மணீஷ் சிசோடியாவுக்கு மே 31 வரை காவல் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT