இந்தியா

கரோனா: மகாராஷ்டிரம், மும்பை, தாராவி நிலவரம்

DIN


மகாராஷ்டிரம், மும்பை மற்றும் தாராவியில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் பற்றிய இன்றைய (திங்கள்கிழமை) சமீபத்திய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிரம்:

மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 1,230 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 36 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 23,401 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 868 பேர் பலியாகியுள்ளனர்.

மும்பை:

மும்பையில் இன்று ஒரே நாளில் 791 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 20 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 14,355 ஆக உயர்ந்துள்ளது. இதில் 3,110 பேர் குணமடைந்துள்ளனர். 528 பேர் பலியாகியுள்ளனர்.

தாராவி:

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் இன்று புதிதாக 57 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தாராவியில் மட்டும் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 916 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 29 பேர் பலியாகியுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT