முகப்பு
இந்தியா

சத்தீஸ்கரில் கரோனா பாதிப்பு குறைந்தது: 6 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை 

ராய்பூர் மாவட்டத்தில் கரோனா சிகிச்சை பெற்று வந்த நான்கு பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், சத்தீஸ்கரில் கரோனா

Updated On : 11 மே, 2020 at 2:57 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:07 PM

ராய்பூர் மாவட்டத்தில் கரோனா சிகிச்சை பெற்று வந்த நான்கு பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் கரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை ஆறாகக் குறைந்துள்ளது. 

கபிர்தாம் (காவர்தா) மாவட்டத்தைச் சேர்ந்த இருவர், சூரஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் உள்பட நான்கு பேர் குணமடைந்த நிலையில், எய்ம்ஸ் ராய்ப்பூரிலிருந்து வெளியேற்றப்பட்டதாக மாநில சுகாதார அமைச்சர் டி.எஸ்.சிங்தியோ டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார். 

கடந்த மூன்று நாட்களில் எய்ம்ஸ் ராய்ப்பூரிலிருந்து 15 பேர் சிகிச்சைபெற்று வெளியேற்றப்பட்டனர். தற்போது கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 6 பேர் மட்டுமே எய்ம்ஸ் ராய்ப்பூரில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement

கரோனா சந்தேகத்தின்பேரில் இதுவரை மொத்தம் 25,282 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அவற்றில் 24,186 பேருக்கு கரோனா இல்லை என்று தெரியவந்துள்ளது. மேலும் 1,037 பேரின் ரத்த மாதிரிகளின் முடிவுக்காகக் காத்திருக்கின்றன.

சத்தீஸ்கரில் 59 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், அவற்றில் 53 பேர் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.